மகிந்தாங்கன - தெஹியத்தகண்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்த நாய் ஒன்றின் மீது மோதிய மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் கிராந்துருக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பின்னால் அமர்ந்து பயணித்த பெண் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
