ஏப்ரல் மாதத்தில் 12 சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு எவ்வித பற்றாக்குறையுமின்றி பராமரிக்கப்படுவதாகவும், கோரப்பட்ட சரக்குகள் திட்டமிட்டபடி வந்து சேரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, 30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் சரக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
