அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். குறைந்தது இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி தேவைப்படுகின்றது. ஆனால் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகின்றது. ஏனையோரின் நிலை என்ன? அவர்கள் முன்வைத்த மேன்முறையீடுகளுக்கு என்ன நடந்தது? என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை 27 / 2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


இன்று எமது நாட்டிலே 'அஸ்வெசும' நலன்புரித் திட்டமானது 24 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாகக் கருதப்படுகின்றது.


ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தத் திட்டத்திற்கான தகுதிகளைத் தீர்மானிக்க அரசாங்கம் இன்னும் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தரவுகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.


2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த நாடு கோவிட் பெருந்தொற்றையும், வரலாற்றில் எப்போதுமில்லாத மோசமான பொருளாதார நெருக்கடியையும் சந்தித்திருக்கின்றது.


உலக வங்கியின் தரவுகளின்படி, இலங்கையின் வறுமை விகிதமானது 11 சதவீதத்திலிருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.


நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும்போது, காலாவதியான தரவுகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் நிவாரணங்களை வழங்க முடியும்? இதனால்தான் தகுதியுள்ள பல ஏழைக் குடும்பங்கள் இன்று அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாமல்

புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.


குறிப்பாக எனது மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், அங்கு 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். குறைந்தது இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி தேவைப்படுகின்றது.


ஆனால் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகின்றது. ஏனையோரின் நிலை என்ன? அவர்கள் முன்வைத்த மேன்முறையீடுகளுக்கு என்ன நடந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.