சிங்கப்பூர் பூங்கா ஒன்றில் தூங்கி கொண்டிருந்த இலங்கை இளைஞன்-சுத்து போட்ட பொலிசார்-நடந்தது என்ன

 சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசா காலம் முடிந்த பின்னரும் சுமார் 10 மாதங்களாக சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 27 வயதுடைய இளைஞரே சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி அதிகாலையில் உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள பூங்காவில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞன் தூங்கிக் கொண்டிருந்த போது, சாதாரண உடையில் வந்த அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்தனர்.

வெளிநாடொன்றில் பதுங்கியிருந்த இலங்கை இளைஞன் அதிரடியாக கைது | Sri Lankan Arrested In Singapore

விசாரணையில், அந்த இளைஞர் சமூக வருகை விசா மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவரது விசா காலம் கடந்த ஆண்டு ஜுன் 28ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.

விசா காலாவதியான பிறகும் அவர் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியுள்ளார். அந்த இளைஞர் நிரந்தர முகவரி ஏதுமின்றி சுற்றித் திரிந்துள்ளார்.

சம்பவத்தன்று மற்றொரு வெளிநாட்டவருடன் அவர் தங்கியிருந்தது அவதானிக்கப்பட்டுள்ளது.

11 அதிகாரிகள் கொண்ட குழு, அவர் தப்பிச் செல்லாதவாறு அனைத்து வழிகளையும் அடைத்து சோதனையிட்டனர்.

வெளிநாடொன்றில் பதுங்கியிருந்த இலங்கை இளைஞன் அதிரடியாக கைது | Sri Lankan Arrested In Singapore

அதிகாரிகள் தங்களின் கையடக்க பயோமெட்ரிக் கருவி மூலம் இளைஞரின் கைரேகை மற்றும் முக அடையாளங்களைச் சரி பார்த்துள்ளனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.