லுனுகம்வெஹெர - மத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 15 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது, 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவனுக்கும், 10ஆம் தரத்தில் பயிலும் 14 வயதுடைய மாணவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இது பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்த ஆசிரியர்கள் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 15 வயதுடைய மாணவன், திடீரென வாந்தி எடுத்ததோடு உடல்நலக் குறைபாட்டிற்கு உள்ளாகியுள்ளார்.
எனினும், நிலைமை கவலைக்கிடமாகி, மாணவனின் மூளையினுள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலில் ஈடுபட்ட மற்றைய மாணவன் லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பின்னர், மத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
