ஏப்ரல் 1, 2026 புதன் கிழமை சிறப்பு தினமான இன்று ஆளும் அதிபதியாக புதன் பார்க்கப்படுகிறார். கன்னி ராசியில் இன்று இரவும் பகலுமாக சஞ்சாரம் செய்யும் சந்திரன், ஒரு சில ராசிக்கு நேர்மறையான பலன்களையும், ஒரு சில ராசிக்கு சவாலான காலத்தையும் கொண்டு வருகிறார்.
மேஷம் ராசி பலன் ராசி
மேஷ அன்பர்களுக்கு இன்று, சந்திரன் நோய், எதிரிகளின் ஸ்தானத்தை குறைக்கக்கூடிய ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்யக்கூடிய காரணத்தால், உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை, பணியிடத்தில் எதிரிகள் தொல்லை சந்திப்பது என சற்று தொலை தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று மாலை நேரத்தில் ஒரு முக்கிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்பு உண்டு. அரசாங்கத்திடமிருந்து சிறப்பு கௌரவத்தை பெறலாம். பொருள் ரீதியாக முன்னேற்றத்தை காண்பீர்கள். இன்று நீங்கள் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சுப காரியங்களுக்காக நீங்கள் செய்யும் செலவுகள் சமூகத்தில் நற்பெயர் பெற்று தரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் கவனம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான ஒரு புனித தலத்திற்குச் செல்வது உங்கள் மனதிற்கு அமைதியை மேம்படுத்தும். ஒரு சட்ட வழக்கில் வெற்றியும், இடமாற்றம் தொடர்பான திட்டங்களும் வெற்றியடையலாம். நாளின் பிற்பகுதியில் சில சிக்கல்கள் இருந்தாலும், உங்கள் தைரியம் அவற்றை சமாளிக்க உதவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும், மேலும் உங்கள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் வேலைகளை முடிப்பதில் உங்களுக்கு ஒரு சாதகமான சூழல் நிலவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாள். நீங்கள் சில படைப்பு அல்லது கலை சார்ந்த பணிகளை முடிப்பதில் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான சில வேலையைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சங்கு ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதால் வேலைகளுக்கு இடையே நீங்கள் ஓய்வெடுக்க உதவும். இன்று உங்கள் மனதில் புதிய திட்டங்களும் தோன்றும். முக்கிய வேலைகளை முடிப்பதற்கு உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாள். நீங்கள் வேலை மட்டும் பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் செய்யும் போது அதற்கான உடனடி பலன்களைப் பெறலாம். முடிக்கப்படாத பணிகள் நிறைவடைய வாய்ப்பு உண்டு. மேலும் முக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டு உங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். அலுவலகத்தில் உங்கள் யோசனைகளுக்குச் சாதகமான சூழல் நிலவும், மேலும் உங்கள் சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாலையில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருந்தாலும், உங்களுடைய சிந்தனையை மற்றும் பொறுமையான செயல்பாடு அனைத்தையும் சமாளித்து முன்னேற உதவும். இன்று ஆன்மீக விஷயங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குவது புத்திசாலித்தனம். இது மன அமைதியை கொடுக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையைத் தடுக்க முயற்சிப்பார்கள். இரவு மங்களகரமான செயல்களில் ஈடுபடுவீர்கள்.தொலைநோக்கு பார்வையுடன் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும். புதிய திட்டங்கள் அல்லது முதலீடுகளை மிகவும் கவனமாக செய்வது அவசியம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உரையாடல்களில் நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிப்பது நன்மை தரும். மற்றவர்களுடன் மோதலில் ஈடுபடாமல் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் சில மங்களகரமான நிகழ்வுகள் நடத்துவது குறித்து விவாதிப்பீர்கள். உங்கள் விதியை நம்பி நம்பிக்கையுடன் செயல்படுங்கள். இரவில் உங்களுடைய நிலைமை மேலும் மேம்படும். வேலை, நிர்வாகப் பணிகளில் தொழில்நுட்பம் தொடர்பான சிக்கல்கள் தீர்ப்பதில் உங்கள் திறமை வெளிப்படும். ஐயா வணக்கம் மன செயல்பாடு பாராட்டை பெற்று தரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நன்மை அதிகம் கிடைக்கும் நாள். வேலை தொடர்பான அனைத்து தகராறுகளும் இன்று தீர்வை கண்டுபிடிப்பீர்கள். ஒரு புதிய திட்டத்தின் வேலையை தொடங்கலாம். குடும்பத்தினரோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களும் சொத்து சம்பந்தமாக சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சி செய்யலாம். அதனால் சூழலை மிகவும் கவனமாக கையால்வது நல்லது. பொறுமை புத்திசாலித்தனம் செய்யப்படும் நாள். ஆக்கப் பூர்வமான பண்ணலாம் பெறுவதில் ஆர்வம் காட்டவும். ஊக வணிகத்தில் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நிதி நிலை தொடர்பாக முன்னேற்றத்தை தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று ஒரு தைரியம் தரக்கூடிய வலுவான நாள். நாள் முழுவதும் உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எனவே, சுறுசுறுப்பாக உழைக்க வேண்டிய நாள். உங்கள் குடும்பத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படும். உங்கள் வேலையிலோ அல்லது தொழில் தொடர்ந்ததாக நீங்கள் புதிய திட்டங்களில் ஈடுபடுவது,புதுமைகளைப் புகுத்துவது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். உங்கள் பணி புத்துணர்ச்சி பெறும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் நீங்கள் ஒரு சிறிய புதிய முயற்சிகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க லாபத்தைத் தரும். இன்று அன்றாட பணிகளை தாண்டி புதிய விஷயங்களை செய்ய வேண்டிய சூழல் இருக்கும். அன்புக்குரியவர்களுக்காக எதிர்பாராத விதத்தில் பணம் செலவிட நேரிடும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதை சரியாக அடையாளம் கண்டு பலன் பெறுவது நல்லது. கணக்குகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விவரங்களை கவனமாக பராமரிக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சாதகமான நாள். கூட்டணி வைத்து செய்யக்கூடிய வணிகத்தில் மிகவும் லாபகரமானதாக இருக்கும். அன்றாட வீட்டு வேலைகளை முடிக்க இன்று ஒரு பொன்னான வாய்ப்பு. உங்கள் பிள்ளைகள் சம்பந்தமாக ஒரு பெரிய முடிவை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம். அது போன்ற நேரத்தில் நேர்மை மற்றும் நிதானத்தை கடைபிடிக்கவும். குடும்பத்திலும் பணியிடத்திலும் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வது மன பதட்டத்தை அதிகரிக்கக்கூடும்.இன்று பிறரிடம் எந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது சிறப்பு எச்சரிக்கையுடன் செயல்படவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நலம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். பருவநிலை மாற்றங்கள் உடல்நலம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்கள் உணவுப் பழக்கங்களில் கவனமாக இருக்கவும். வியாபார விஷயங்கள் எதிர்பார்த்த பலன் தரும். அவசரம், அதீத நம்பிக்கை தவறுகளுக்கு வழிவகுக்கும், எனவே எதையும் செய்வதற்கு முன் கவனமாக சிந்தித்து செயல்படும். தகுதி நேரம் வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய தனிப்பட்ட திறமையை மட்டும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் விஷயத்தில் ஈடுபடுவது நல்லது.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்கொள்ளும் இடங்களை தைரியமாக சந்திப்பது எதிர்பார்த்த பலனை தரும். இன்று வேகமாக இருப்பதும் செயலில் மென்மையான அணுகுமுறையும் பிரச்சனைகளை தீர்க்க உதவும். இன்று தேவை உள்ள சிலருக்கு உதவ முடிந்தால் அது மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தரும். உங்களுடைய படைப்பாற்றல் அதிகரிக்கும். சிக்கலான திட்டங்களை ஒழுங்குப்படுத்தி செயல்படுவது நன்மை தரும். சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
