காதலியைச் சந்திக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு ; ஆரம்பக்கட்ட விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்

 இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் மாநிலத்தில் உள்ள புலந்த்ஷர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.34 வயதான வினோத் குமார் என்ற நபர், தனது காதலியை சந்திக்க புலந்த்ஷர் பகுதிக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின் படி, காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞர் அவர் மருத்துவர் ஆலோசனை இன்றி, பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க அதிகளவில் சில மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அதன்பின்னர் அவர் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், அந்த பெண் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோது, அந்த பெண் அங்கிருந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், வினோத் குமார் முதலில் அந்தப் பெண்ணுடன் ஒரு விடுதிக்கு சென்றதும், பின்னர் ஒரு பூங்காவிற்கு சென்றதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு இருந்தபோது அவரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வினோத் குமாரின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான துல்லிய காரணம் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்ததாகக் கூறப்படும் பெண்ணை அடையாளம் காணும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.