சிலாபம் - குருநாகல் வீதியின் முகுணுவட்டவன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
குருநாகல் திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்கவில சந்தியில் வலதுபுறமாகத் திரும்ப முற்பட்டபோது, அதே திசையில் பின்னால் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணும், பின்னால் அமர்ந்து சென்ற அவரது மகனும் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கரவிட்டிங்காரய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)