நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பேருந்து நிலைய வீதியில், வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மடபாத பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தொம்பே - பூகொட வீதியின் கிரிதர பகுதியில், பூகொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த பெண் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கப்புகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் காயமடைந்து தொம்பே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)