துபாய் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்பட்ட தீயை அணைக்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தொட்டியை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தீயைக் கட்டுப்படுத்த சிவில் பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
