பண்டிகைக் கால தேவையை கருத்தில் கொண்டு, எரிபொருள் கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுவதற்காக போதுமான அளவு கையிருப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் மயூர நெத்திக்குமாரகே தெரிவித்துள்ளார்,இதன் ஒரு பகுதியாக, 92 ஒக்டேன் பெற்றோல் 30,000 மெட்ரிக் தொன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் 5,200 மெட்ரிக் தொன் கொண்ட கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், 35,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட மற்றொரு கப்பலில் இருந்து தற்போது எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி வழமையான முறையிலும் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
