மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்திலும், லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் மேற்கொள்ளப்படாத நிலையில் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் உன அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாய் ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
