இன்று திருமணம்... மாப்பிள்ளையை கொலை செய்த நண்பர்கள் ; கொழும்பில் சிக்கிய சந்தேக நபர்கள்

 

இன்று (12) திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி மணமகன் கொல்லை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

   மொரட்டுவ, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 'குடு ஷம்மி', 'டுடூ' மற்றும் 'ஹங்ச' ஆகிய புனைப்பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் பொலன்னறுவைக்கு தப்பிச் செல்வதற்காக புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்தன்று சந்தேகநபர்கள் குறித்த இளைஞனை தொலைபேசியில் அழைத்து, வில்லோரவத்தையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வருமாறு கூறியுள்ளனர்.

அங்கு தனது முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞனை மூவரும் சேர்ந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். கொலை செய்த பின்னர், உடலத்தை அங்கிருந்த குளம் ஒன்றில் போட்டுக் கழுவியுள்ளனர். பின்னர் உணவகத்திலிருந்த இரத்தக் கறைகளையும் கழுவி துப்புரவு செய்துள்ளதாக சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உடலத்தைக் கடலில் வீசுவதற்காக உயிரிழந்த இளைஞனின் முச்சக்கரவண்டியிலேயே அதனை ஏற்றிச் சென்றுள்ளனர். எனினும், வில்லோரவத்தை பாடசாலை ஒன்றிற்கு அருகில் சென்றபோது முச்சக்கரவண்டியின் எரிபொருள் தீர்ந்துள்ளது.

இதனால் உடலத்துடன் முச்சக்கரவண்டியை அங்கேயே விட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. கொலை செய்யப்பட்ட சுரேஷ் தமிந்த பெர்னாண்டோ போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதேவேளை கொலை செய்யப்பட்ட சுரேஷ் தமிந்த பெர்னாண்டோ என்ற இளைஞன், இன்று (12) தனது திருமணத்தை நடத்தவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.