கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர்கள் தலைமறைவு

இரத்தினபுரி - அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை தூல்கல பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் பெண் ஒருவர் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கின்றார் என்று அயகம பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு அயகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கொலையைச் செய்த சந்தேகநபர்கள் யார்? அல்லது எதற்காக இந்த கொலை செய்யப்பட்டது? என்பது குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை அயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.