எரிபொருளுக்காக இலங்கையர்கள் செய்யும் செயல் ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை


 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி அளித்துள்ள நிலையில், பொதுமக்கள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலன்கள், போத்தல்கள் அல்லது ஏனைய கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம் மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்குபவர்கள், அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.