கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தவுள்ள தமிழ் பெண் – குமுதினி கோபாலகிருஷ்ணன்
இலங்கையில் முதன்முறையாக நேரடியாக கின்னஸ் உலக சாதனை முயற்சி ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த அரிய நிகழ்வை நேரில் பார்வையிடும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளது.
777 வேறுபட்ட மெழுகுவர்த்தி தாங்கிகளை ஒன்று சேர்த்த கின்னஸ் உலக சாதனை
யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது கனடாவில் வசித்து வரும் தமிழ் பெண் குமுதினி கோபாலகிருஷ்ணன், தனது நீண்டகால முயற்சியின் பலனாக கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தத் தயாராகியுள்ளார்.
இந்த சாதனை முயற்சி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு A-09 வீதி, திருமுறுகண்டி பகுதியில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் இதுபோன்ற கின்னஸ் உலக சாதனை நிகழ்வு இதற்கு முன் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் எமது நாட்டவரும் உலகளவில் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்களின் சாதனை வெற்றிகரமாக அமைய எமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.