மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாகல் செய்த நிலையில் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிக்ஷா திருமண நிகழ்வொன்றிற்கு ஜோடியாக வந்தமை பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேசியது சர்ச்சை ஆன நிலையில், இந்த விவகாரம் பற்றி பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.நான் த்ரிஷா பற்றி விருப்பப்பட்டு கேட்டு அப்படி பேசினேன் என்பது பொய். த்ரிஷா போட்டோ வந்ததும் நான் திகைத்துவிட்டேன். நான் யாருக்கும் அடிமையாக இல்லை, காசு வாங்கிட்டு அப்படி பேச போகவில்லை. காசு வாங்கிட்டு நான் எந்த காட்சியிலும் போய் சேரப்போறது இல்லை.நானே போட்டோ போடுங்க பேசுகிறேன் என சொல்கிறேன் என்றால், மகளிர் தினத்தன்று நான் வேலு நாச்சியார், டயானா சார்ள்ஸ், மதர் தெரசா பற்றி பேச ஆசைப்பட்டிருக்கலாம். இப்படி இவரை பற்றி பேச ஆசைப்பட்டேன் என சொல்வது சரியல்ல.
குந்தவை குந்தவை என பிரியங்கா அருகில் சொல்லிக்கொண்டே இருந்தாங்க. 40 வயது ஆன த்ரிஷா வீட்டிலேயே இருந்து கொண்டு விஜய்யை மட்டும் அனுப்பி இருந்தால் நன்றாக இருக்குமே என பத்திரிகையாளர் ஒருவர் பேசி இருந்தார்.கரூர் பிரச்சனையில் கூட அவருக்கு இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்ச்சிக்கு அவர் வராமல் இருந்திருக்கலாம் என தான் அப்படி பேசினேன் என்கூறி பார்த்தீபன் காணொளி வெளியிட்டுள்ளார்
