பாடசாலை மாணவர்களுக்கு சற்றுமுன் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 

  பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், பொதுப் பயன்பாடுகள் மற்றும் கைத்தொழில்கள் தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய தொற்றுநோய், பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பதிலாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளது," என அவர் குறிப்பிட்டார். கடந்த கால தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகளுக்குப் பொறுப்புக்கூறுவதைத் தவிர்க்கவே இத்தகைய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். இந்த நெருக்கடி அரசாங்கத்தின் தோல்வியல்ல, மாறாக உலகளாவிய மோதல்களின் (மத்திய கிழக்கு போர்) விளைவாகும். மத்திய கிழக்கு மோதல் ஆரம்பித்து 20 நாட்களுக்குள், அரசாங்கம் எடுத்த மூலோபாய முடிவுகளால் தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த எரிபொருள் விலை திருத்தங்களில் ஒன்றை இலங்கை மேற்கொண்டுள்ளது. எரிபொருள் பாவனையை முறையாக நிர்வகிக்க கியூ.ஆர். குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைகேடுகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முடிவாக,இக்கட்டான இக்காலகட்டத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணவும் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.