ஈரானுக்கு எதிரான தாக்குதலில், முதல் 24 மணிநேரத்திற்குள் ஈரானின் 1,000 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'ஒபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் முதல் 24 மணிநேரத் தாக்குதல்களுக்கு, ரேடார் கண்களில் சிக்காத அதிநவீன குண்டுவீச்சு விமானங்கள், ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கையில் ஈரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பெலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படையின் கூட்டுத் தலைமையகம் ஆகியன இந்தத் தாக்குதல்களின் பிரதான இலக்குகளில் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
