பணத்திற்காய் இயற்கை தரும் உணவில் மனிதன் செய்யும் கேவலம்-13 பேர் பலி

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படப் பால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி அப்பகுதியில் உள்ள முதியவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம், வாந்தி, வயிற்று வலி மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவராக இறந்துள்ளனர். 

பிப்ரவரி 22 ஆம் திகதி முதல் உயிரிழப்பு நடந்துள்ளது. 76 வயதான தாடி கிருஷ்ணவேணி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது மகன் அளித்த புகாரைத் தொடர்ந்து ராஜமுந்திரி 3 டவுன் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் தயிர் ஆகியவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 

விசாரணையில் எத்திலீன் கிளைக்கால் (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்த பாலை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தப் பாலை இவர்களுக்கு விநியோகித்த கணேஸ்வர ராவ் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.