சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே, பம்பல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநனர் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (20) இன்று இடம்பெற்றுள்ளது.
விற்பனைக்காக மீன்களை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னால், அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் இருந்த மீன்கள் வீதியெங்கும் சிதறிக் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
.webp)