யாழ்ப்பாணத்திற்கு தென்கிழக்காக மிக நெருக்கமாக காணப்படும் மேலடுக்கு சுழற்சியால் வடக்கு மாகாணத்தில் தற்போது மேகமூட்டம் மற்றும் ஆங்காங்கே சாதாரண மழையுடனான வானிலை நிலவுகிறது.
எனினும், வட இந்திய நிலப்பரப்பில் நுழைந்துள்ள மேற்கத்தைய இடையூறின் எதிர்த்தாக்கத்தின் காரணமாக, அடுத்துவரும் 24 மணிநேரத்தில் இந்த காற்று சுழற்சியானது மேலும் மேற்கு நோக்கி நகரமுடியாமல் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியை நோக்கி திரும்பிச்செல்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக காணப்படுகின்றன.
இதன் காரணமாக இந்த சுழற்சியால் இன்று ஒருநாள் மட்டும் வடக்கு மாகாணத்தில் ஆங்காங்கே மிதமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு, இதன்மூலம் தெற்கிலிருந்து ஈர்க்கப்படும் ஈரப்பதன் நிறைந்த காற்றின் விளைவால் கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 50-100மிமீ வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
குறித்த பிரதேசங்களில் இரு திசைக்காற்று குவியும்போது இடிமின்னல் தொடர்பான அனர்த்தங்களும் நிகழக்கூடும் என்பதால் கிழக்கு, மற்றும் மத்திய மலைநாட்டில் இது தொடர்பாக மக்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுவது பாதுகாப்பானதாக அமையும்.!
21.02.2026 - 11.00AM
