சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அகோரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பேயன்பட்டியைச் சேர்ந்தவர் 26 வயதான இவர் கூலி தொழிலாளி ஒருவர் மர்ம நபரால் கத்தியால் கழுத்தில் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.தகவலறிந்து சென்ற குன்றக்குடி பொலிஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முன் விரோதம் காரணமாக இந்த கொலைச் சம்பவம் நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. வழக்கில் திடீர் திருப்பமாக அதே பகுதியைச் சேர்ந்த அகோரி கைது செய்யப்பட்டுள்ளார்.65 வயதான குறித்த நபர் அகோரி போல சுற்றித் திரிந்துள்ளார். இரவில் சுடுகாட்டுப் பகுதியில் அடிக்கடி பூஜை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார். இவர், கஞ்சா உபயோகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று உயிரிழந்த நபர் தனக்கு கஞ்சா வேண்டும் என்று கேட்டு அகோரியை தொந்தரவு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அகோரி, தனது இடுப்பில் வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து கழுத்தில் ஓங்கிக் குத்தியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.இதையடுத்து, அகோரியை கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கேட்டு தகராறு செய்த இளைஞரை, அகோரி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் காரைக்குடி பகுதியை கதிகலங்க வைத்துள்ளது.
