லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

 

சந்தையில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் நிலவியபோதிலும், தமது எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் தடையின்றி தொடரும் என லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி (LAUGFS Gas PLC) பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் உள்ள 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிவாயு இறக்குமதி முனையத்தில் ஏற்பட்ட தற்காலிகத் தடையால், வழமையான இறக்குமதி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த முனையத்திற்கான அனுமதி நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்காக நிறுவனம் அரசாங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றது.

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சர்வதேச விநியோகஸ்தர்களுடன் இணைந்து எரிவாயு கப்பல்களை நேரடியாகக் கொழும்பு துறைமுகத்திற்குத் திசைதிருப்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எரிவாயு கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விநியோகக் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தேவையான எரிவாயு தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.