போதைபொருளுடன் சிக்கிய சட்டத்தரணி- அதிரடி உத்தரவு

 



கொழும்பில் கேசல்பவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கேசல்பவத்தை காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்தச் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 1996ஆம் ஆண்டு சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, கைது செய்யப்பட்டவரிடமிருந்து 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


குறித்த உத்தரவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (22-02-2026) பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.