காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற இளம்பெண் ; நடுரோட்டில் சண்டையிட்ட கணவன்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் ஹம்பூர் மாவட்டத்தில் காதலர் தினத்தன்று கள்ளக்காதலால் நடுரோட்டில் ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியது.ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருந்தது. பின்னர் அவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், காதலர் தினமான இன்று அந்த பெண், குறித்த இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்கள் மீரட் மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் கணவன் அவர்களை கண்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர் இருவரையும் விரட்டிச் சென்று மேம்பாலம் பகுதியில் மடக்கிப் பிடித்தார். அப்போது கணவனுக்கும் மற்றைய இளைஞருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

சம்பவத்தை பார்த்து சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர். சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனாலும், தொடர்ந்து சண்டையிட்டதால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார் இளம்பெண், அவரின் கணவன், கள்ளக்காதலன் ஆகிய 3 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், 3 பேரையும் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.