இன்று(15.02) திருகோணமலையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து கணவன் மனைவி உட்பட நால்வர் காயம்! வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சம்பவ இடத்தில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தனர்
இவ்விபத்து திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதியின் காயங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவி ஆகிய இருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலும் இருவரும் என நால்வர் காயமடைந்துள்ளனர் ,சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


