களுத்துறையில் அகலவத்தை, திரிவானகெட்டிய தோட்டப் பகுதியில் காயங்களுடன் வயோதிபப் பெண்ணின் சடலம் காலை மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் திரிவானகெட்டிய தோட்டப் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண் ஆவார்.வயோதிபப் பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
