நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது
நேற்று(06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4330 ரூபாவாகும்.
அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1742 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
