நிர்வாணமாக நடு வீதியில் ரகளை பண்ணியவரால் நேர்ந்த பதற்றம்

 


 பெங்களூரின் களியாட்ட வளாகத்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நிர்வாணமாக அப்பகுதியில் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், அவர் மீது சிற்றூந்து மோதி ஏற்றப்பட்ட விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு லாவெல்லே வீதியில் அமைந்துள்ள உயர்தர களியாட்ட விடுதிக்கு, அப்பகுதியைச் சேர்ந்தவர் மதுபோதையில் வந்துள்ளார்.

தனது தந்தை களியாட்ட விடுதியின் உறுப்பினர் எனக் கூறி உள்ளே நுழைய முயன்ற அவரை, பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென தனது ஆடைகளை முழுமையாகக் களைந்த ஆனந்த் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான காணொளியில், அங்கிருந்த சொகுசு சிற்றூந்து ஒன்றின் முன்னால் ஆனந்த் நிர்வாணமாக நிற்பதும், ஆத்திரமடைந்த ஓட்டுநர் அவர் மீது சிற்றூந்தை ஏற்றிச் செல்ல முயல்வதும் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக குறித்த நபர் முறைப்பாடு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். பாதுகாப்புப் பணியாளர் மற்றும் சிற்றூந்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.