யாழ் பல்கலைகழக வரலாற்றில் நயினை தேசத்தின் தவப்புதல்வி வரலாற்று சாதனை{படங்கள்}

 யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நயினாதீவு மாணவி அபிராமி! 

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ்.நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இன்று வியாழக்கிழமை (19.02.2026) ஆரம்பமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப நாளில் 8 தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார். இதன்மூலம் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவியாக மேற்படி மாணவி இடம்பிடித்துள்ளார். 

மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம், சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology) மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற துறைகளில் விசேட சித்தி, மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவிக்கான விருது ஆகியவற்றுக்காகவே குறித்த தங்கப் பதக்கங்கள் மாணவி அபிராமிக்கு வழங்கப்பட்டுள்ளன.

வாழ்த்துகள்  சகோதரி




கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.