வீடுகளில் மேலதிக வகுப்பு நடத்துவதற்கு சென்று 59 இலட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட ஆசிரியர் கைது
மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக வந்து, இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் வகுப்புக்களுக்காக வீடுகளுக்குச் சென்று, அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஒப்படைக்காது மோசடி செய்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
