அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாதளவுக்கு உயர்வடைந்துள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் இலங்கையில் , இன்று (பெப்ரவரி 24) தங்கத்தின் விலை நிலையாகக் காணப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனையானது. நேற்று அதன் விலையில் 4,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டதையடுத்து, இன்று தங்கத்தின் விலையில் மேலதிக மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
