இலங்கையில் காதல் முரண்பாட்டால் உயிர் மாய்த்துக்கொண்ட காதலி! தலைமறைவான காதலன்'

 


அனுராதபுரம், நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நேற்று(21) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாகக் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.

இவர்களது காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், நீண்டகாலமாக இந்த உறவு நீடித்து வந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று, காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனமுடைந்த யுவதி, தனது வீட்டிலேயே தவறான முடிவெடுத்துக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, காதலன் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் பெற்றோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ள பொலிஸார், தலைமறைவாகியுள்ள காதலனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.