மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயத்தின் 134-ம் ஆண்டு தீமிதி திருவிழாவில், இளைஞர் ஒருவர் தவெக கொடியை ஏந்தியபடி தீக்குண்டத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேர்த்திக்கடன் செலுத்தும்போது அரசியல் கொடியுடன் வந்ததை கண்ட கோயில் நிர்வாகத்தினர், உடனடியாக அந்த இளைஞரின் கையிலிருந்த கொடியை பிடுங்கியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.