சலனம் தரும் சனி-இன்றைய ராசிபலன்{7.2.2026}

 

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026
மேஷம்
aries-mesham
பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் . தொழிலில் தனவரவு தொடரும். வாகன, போஜன சுகங்கள் வளரும் நாள். உனக்கென்னையா ராஜா ! என உறவுகள் உரைக்கும் உன்னத நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
ரிஷபம்
taurus-rishibum
எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் அதிகாரிகளுக்கு திருப்தி இருக்காது. ஆரோக்கியக் குறைவு, பயணத்தில் தடங்கல்கள் ஆகியவை ஏற்படும். வீட்டில் பொருள்கள் காணாமல் போகலாம்.
மிதுனம்
gemini-mithunum
மனதில் கலக்கம் ஏற்படலாம். வீண் செலவுகளும் பயணங்களில் தடங்கல்களும் ஏற்படலாம். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். இந்த நாள் இனிய நாளாக இறைவனை இறைஞ்சுவதைத் தவிர வழியேதும் இல்லை.
கன்னி
virgo-kanni
மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன் பெரும் வளமான நாள். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள்.
மகரம்
capricorn-magaram
மனதில் அமைதியும், தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபாடும் நிலவும். சுகம், சந்தோஷம் மற்றும் உல்லாசப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். அரசு ஆதரவும், பெரியோரால் நன்மைகளும் உண்டு. பணி உயர்வு, பணவரவு எல்லாம் உண்டு.
கடகம்
cancer-kadagam
எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். புத்தி தெளிவு பெற்று ஆதாயம் தரும் புதுப்புது சிந்தனைகள் தோன்றும். சகோதரரால் நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வம்பு, வழக்கு மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். தனநாசம் ஏற்பட்டு அதனால் கவலைகள் அதிகரிக்கும். உடற்சோர்வு ஏற்படும்.
துலாம்
libra-thulam
கோபத்தால் வம்பு தும்பை விலைக்கு வங்காதிருப்பதே விவேகம் புத்தி தெளிவின்மையால் மதியம்வரை நிம்மதியற்ற நிலை தென்படும். பெண்களின் பேராசை காரணமாக வெட்டிச் செலவுகள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
காதல் உறவு கனிந்து களிப்புறும் நாள். மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும்.
தனுசு
sagittarius-thanusu
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும் நாள். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு. விருந்தோம்பலால் மனம் மகிழும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். ஆராய்ச்சி மனப்பான்மையால் ஆதாயம் உண்டு. பலவகையிலும் தன லாபங்கள் ஏற்படும். பிறருக்கு உதவுவதால் மனம் பேரின்பம் அடையும். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும்.
கும்பம்
aquarius-kumbam
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. வழக்கு விவகாரங்களால் வாழ்க்கையில் புதுத் திருப்பங்கள் ஏற்படும். மனைவியன் கலகத்தால் உறவுக்குள் பகை ஏற்படும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.