கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற நபர்



இந்தியாவின் தேசிய தலைநகர் டெல்லியில், பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்த முன்சுன் கேவட் என்பவர், தனது கர்ப்பிணி மனைவி அனிதா (27) மற்றும் மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நேற்று காலை பிரேம் சந்த் பார்க் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் நிகழ்ந்தது. அவர்களுக்கு ஐந்து, நான்கு மற்றும் மூன்று வயது மூன்று மகள்கள் இருந்தனர்.

அனிதா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உடல்கள் பிணமாக கிடந்ததை பார்த்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.பொலிஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் விசாரணைகளில், முன்சுன் கேவட் மனைவி மற்றும் மகள்களுக்கு போதை மருந்து கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக தெரிய வந்துள்ளது.

பொலிஸார் தற்போது சம்பவத்தின் பின்னணி காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

கொலையின் காரணமாக திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை அல்லது ஆண் குழந்தை இல்லாதது என்பதற்கான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகின்றன.

முன்சுன் கேவட்டை தேடி பொலிஸார் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.