இலங்கையில் பயங்கரம்-36 சிறுமிகளை பாலியல் நடத்தைக்கு உட்படுத்திய வர்த்தகர்-வெளியான அதிர்ச்சி தகவல்

18 வயதுக்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 36 சிறுமிகளை பாலியல் ரீதியாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரை, காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகம் கைது செய்துள்ளது.

அதன்படி, கைது செய்யப்பட்ட குறித்த நபர் கண்டி, பேராதனை வீதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டின்படி, காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரும் அவரது டிஜிட்டல் சாதனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் 18 வயதுக்குட்பட்ட 36 சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தவறான நடத்தையில் ஈடுபடுவதை காணொளியாக பதிவு செய்து்ளளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளை அடையாளம் கண்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேகநபருக்கு எதிராக 72 மணிநேர தடுப்பு உத்தரவு பெறப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது கொட்டஹேனை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.