தித்திக்கும் திங்கள்-இன்றைய ராசிபலன்{2.2.2026}

 

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2026
மேஷம்
aries-mesham
அன்னையின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. செயல்பாடுகளில் வரக்கூடிய தடை, தாமதங்கள் கண்டு துவண்டு விடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
ரிஷபம்
taurus-rishibum
முயற்சிகள் வெற்றி பெறும். தனலாபம் பெருகும். குழந்தைகள் மீது பாசம் பொழிவார்கள். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
மிதுனம்
gemini-mithunum
குடும்ப உறுப்பினர் இடையே ஒற்றுமை ஓங்க வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். உடற் சோர்வு ஏற்படும்.
கன்னி
virgo-kanni
பெண்கள் மூலம் இலாபமும் சந்தோஷமும் பெருகும். பிறருக்கு உதவி செய்யும் நல்ல எண்ணம் கொள்வீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
மகரம்
capricorn-magaram
பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவர்வர். வாக்கு வன்மையால் வளம் பெருகும். பயணங்கள் பயன் தரும்.
கடகம்
cancer-kadagam
அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும்.
சிம்மம்
leo-simmam
பெண்கள் மூலம் விரயச் செலவுகள் ஏற்படும். வீண் வம்புக்கு செல்லாதிருப்பது நல்லது. மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்
துலாம்
libra-thulam
தைரியம் ஓங்கும். ஆர்வமுடன் செயல்பட்டால் காரியங்கள் அனுகூலமாக முடியும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். இந்திர போகம் உண்டாகும்.
மீனம்
pisces-meenam
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். பயணத்தின் போது தடைகள் அல்லது விபத்துக்களைச் சந்திக்க நேரலாம். எச்சரிக்கை தேவை. பொருட்களைக் கவனமாகப் பாதுகாக்கவும்.
தனுசு
sagittarius-thanusu
நேர்மையாக நடக்க வேண்டிய நாள். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் எழலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ நம்பிக்கை கூடும். புண்ணியக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
எல்லா நலன்களும் உண்டாகும். பயண சுகம் ஏற்படும். தனவரவு கூடும். நண்பர்களால் உதவிகள் ஏற்படும். பெயரும், புகழும் உண்டாகும். தனக்கென சொந்தவீடும் ஏற்படும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.