அந்தவகையில் ஜோதிட கணிப்புகளில் அதிக ஆதிக்கம் கொண்ட கிரங்களில் ஒன்று தான் சூரியன், கிரகங்களின் அரசனாக திகழும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுவார்.இந்நிலையில், பெப்ரவரி 13 ஆம் திகதி கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். கும்பத்தில் ஏற்கனவே அசுரர்களின் குருவான சுக்கிரன் மற்றும் புதன், ராகு ஆகிய கிரகங்களும் இருப்பதால், இந்த நான்கு கிரங்களின் அரிய சேர்க்கை சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.இந்த அரிய ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கோடீஸ்வர வாழ்க்கையை கொடுக்கப்போகின்றது.
அப்படி சுக்ராதித்ய ராஜயோகத்தால் உச்சகட்ட அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளால் இவர்களின் வாழ்வில் எதிர்ப்பாராத வகையில் பல நல்ல திருப்பங்கள் நிகழும். குறிப்பாக பணவரவு சிறப்பாக இருக்கும். தொழில் தீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திறமைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சூரியனின் ஆசியால் தலைமை பதவியும், சுக்கிரனின் அருளால் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பும் கூடி வரும்.
பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் பொருளாதார ரீதியில் அதி உச்ச பலன்கள் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் கூடிவரும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு நிதி நிலையில் உச்ச பலன்களை அனுபவிப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளதால், இவர்களின் வாழ்வில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த விடயத்தில் வெற்றி உண்டாகும்.
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளதால், இவர்களின் வாழ்வில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த விடயத்தில் வெற்றி உண்டாகும்.சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால், திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் தீர்ந்து, கணவன் மனைவிக்கு இடையில் காதல் அதிகரிக்கும். மனநிலை அமைதியானவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.
இந்த காலகட்டம் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் குறித்த சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளதால், இவர்கள் நீண்ட நாள் உழைப்புக்கான பலனை பெறுவார்கள். இவர்களின் மனநிலையில் தெளிவு பிறக்கும்.குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர்களுக்கு குடும்பத்துடன் இணைந்து வாழும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு உச்ச லாபம் கிடைக்கும்.
நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். சூரியனின் ஆசியால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.பணவரவு எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும்.


