மதுஅருந்தி விட்டு கடலில் குளித்த நபரொருவர் உயிரிழப்பு
ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த உறவினரை அழைத்துச் சென்ற 27 வயதான லக்ஷான் என்ற திருமணமாகாத இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கடற்கரையில் மது அருந்திய பின்னர், கடலில் குளிக்க சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தங்காலை, பள்ளிக்கூடாவ பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற வேளையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடலில் மூழ்கிய இளைஞனை அங்கிருந்த வெளிநாட்டவர்கள் காப்பாற்றி முதலுதவி அளித்த போதும் அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.
உயிரிழந்தவர் குடும்பத்தின் ஒரே மகன்.
