பேசாலை கடலில் குளியும் போது காணாமல் போன சிறுவனின் சடலமும் கரை ஒதுங்கியது. மொத்தம் 3 பேர் உயிரிழப்பு
மன்னார் பேசாலை கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் நேற்றைய தினம் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையிலும் ஒருவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் மேலும் ஒரு சிறுவன் கடலில் காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையிலும் அவ்வாறு
கடலில் தேடப்பட்ட சிறுவனும் இன்றைய தினம் சடலமாக கரையோதுங்கிய சோக நிலைமை ஏற்பட்டுள்ளது
இவ்வாறு உயிரிழந்த மூன்று சிறுவர்களும் மன்னாரின் பேசாலை,வசந்தபுரம், உதயபுரம் பகுதிகளை சேர்ந்தவர்களாகும்
உயிரிழந்த சிறுவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
