கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கல்மடுநகரைச் சேரந்த 23 வயதுடைய சிறிகாந்தன் கிருசிகன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் இன்று சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன்பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
அதனையடுத்து இளைஞனை தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
