இலங்கை தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

 

இலங்கையில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மன அழுத்தத்தின் பாதிப்பு 39 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 100,000 பேர் ஆண்டுதோறும் தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

இலங்கையில் மனநோய் வளர்ந்து வரும் பொது சுகாதாரப் பிரச்சினையாகும், இது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இலங்கை மக்கள் தொகையில் சுமார் 13 சதவீதம் பேர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, அவர்களில் சுமார் 3 சதவீதம் பேர் அன்றாட செயல்பாட்டைப் பாதிக்கும் கடுமையான கோளாறுகளை எதிர்கொள்கின்றனர்.

இலங்கையர்களில் ஐந்தில் ஒருவர் அல்லது சுமார் 19 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இளம் பருவத்தினரிடையே மனநலப் பிரச்சினைகள் மிகவும் கடுமையான நிலை. சுமார் 20 சதவீதம் பேர் தனிமையால் பாதிக்கப்படுகின்றனர், சுமார் 18 சதவீதம் பேர் தொடர்ச்சியான மனச்சோர்வு அறிகுறிகளைக் கொண்டுள்ளனர், சுமார் 15 சதவீதம் பேர் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதல் பற்றி தீவிரமாக யோசித்துள்ளனர்.

(தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் Dr தம்மிக்க அழகப்பெரும)

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.