சட்டவிரோதமாக ஆபத்தான வகையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆபத்தான உபகரணங்களைப் பொருத்தி, சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் செல்லும் முயற்சியில், காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக "கொலை முயற்சி" குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
