சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

 காணாமல்போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பண்டாரகம , வீரகெப்பெத்திபொல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி 2025.12.19 அன்றிலிருந்து காணாமல் போயுள்ளதாக பண்டாரகம கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காணாமல்போயுள்ள சிறுமியின் விபரங்கள் 

பெயர் - கரநாயக்ககே ஹசதி திவெத்மி, வயது - 15 , முகவரி - இல. 89/03/03, வீரகெப்பெத்திபொல மாவத்தை , பண்டாரகமை

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் 071 - 8591681 அல்லது 038 - 2290222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.