வவுனியா இளம் தம்பதி சடலமாக மீட்பு; நடந்தது என்ன... துயரில் கதறும் உறவுகள்
வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சம்பவம் புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நீரில் மூழ்கி இருவரும் சாவடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு குறித்த கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
