பிரித்தானியாவின் ஆளில்லா உலங்கு வானூர்தி தனது கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
பிரித்தானியாவின் கடற்படையால் உருவாக்கப்பட்ட முதலாவது முழு அளவிலான ஆளில்லா உலங்கு வானூர்தி தனது கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'புரோட்டியஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உலங்கு வானூர்தி, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும், ஆபத்தான பணிகளை மேற்கொள்வதற்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் உருவாக்கப்பட்ட இந்த உலங்குவானூர்தி, வட அத்திலாந்திக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லியோனார்டோ என்ற விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இது, கணினி மென்பொருட்கள் மூலம் சூழலைப் புரிந்துகொண்டு சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டது.
நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்முறை, கடல் ரோந்து மற்றும் நீருக்கடியில் செல்லும் கலங்களைக் கண்காணித்தல் ஆகிய பணிகளுக்காக இது பயன்படுத்தப்படவுள்ளது.
