டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டிச.31ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலக நாடுகளில் களைகட்டி உள்ளன.
இந்த கொண்டாட்டங்களுக்கு நடுவே ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நோடா நகரில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இந்த விவரத்தை அமெரிக்காவில் உள்ள புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நோடாவில் இருந்து கிழக்கே 91 கிமீ தொலைவிலும், நிலநடுக்கத்தின் ஆழம் 19.3 கிமீ என்றும் அமெரிக்க புவியியல் மையம் கூறி உள்ளது.
நிலநடுக்கத்தின் போது ஏதேனும் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இதேபோன்று திபெத்தில் இன்று ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக லேசான நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
