கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி
சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் காதர் முஹம்மது சாதிக் என்ற 13 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நேற்று முன்தினம் மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் மின் ஆளியை (Switch) அழுத்தியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவன் உடனடியாக மீட்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
